tr-education.org tr-education.org tr-education.org tr-education.org
tr-education.org
tr-education.org
tr-education.org
tr-education.org
tr-education.org
tr-education.org


எமது தமிழர் புரட்சிக் கல்வி அமைப்பு என்பது தமிழர் வாழ்வு முன்னேற்றத்திற்காக திரு. தம்பி இராசலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பில் பலர் அங்கம் வகிக்கிறார்கள். இது முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அதன் யாப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இவ் அமைப்பானது பத்து வகையிலான கல்விமுறை மூலம் தமிழர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எமது பத்து வகையிலான கல்விமுறை உதவிகளில் எவ்வகையிலாவது உதவி தேவைப்படுபவர்கள் எம்மைத் தொடர்புகொண்டு, எம்மால் வழங்கக்கூடிய உதவிகளை இலவசமாகப்பெற்று, தம் வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

The Tamil Revolutionary Educational Organization is a voluntary service organization which was established by Mr. Thambi Rasalingam for the improvement of Tamils’ life. There are many members in this organization. This registered organization provides voluntary services according to the constitution. We are pleased to inform that our organization has been providing voluntary services through ten areas of education to improve the life standard of Tamils. We would like to inform that if anybody needs any help in our ten areas of education, we are happy to provide the voluntary services as much as we can to improve the life standard of Tamils.


 

News

எமது ஆங்கிலப் புத்தகம் பகுதி (i) ஐயும் பகுதி (ii) ஐயும் திருத்திய பதிப்பாக மீண்டும் அச்சிட்டு வசதியற்ற தமிழ் பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களது வாழ்க்கையை வளமாக்குவதற்கு எமக்கு 35,000 டொலரிலும் கூடுதலான தொகை அவசரமாகத் தேவைப்படுகிறது. சிறுதுளி பெருவெள்ளம். எனவே எத்தொகையாயினும் தயவுசெய்து தாராளமாக அனுப்பிவைக்கவும். எம் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான இத் திட்டத்திற்கு தங்கள் பெறுமதியான உதவியை வழங்கி அதன்மூலம் ஒரு அன்பளிப்புப் பரிசுப்பொருளை பெற்றுக்கொள்வதற்கு தயவுசெய்து இங்கே கீழே உள்ள "Donate" பட்டனை கிளிக் பண்ணவும். அன்பளிப்பு செய்வதற்கு முன்பு, இரு புத்தகங்களின் Preview பக்கங்களை முதலில் பார்க்கவும்.
We need more than $35,000 urgently to publish our revised edition English Book part (i) & part (ii) and supply those Books for free of charge to our Tamils who are economically very low or orphanages and very keen in their studies to improve their future by higher education. Many small drops can make a flood. So do make any amount of donation generously. Please click "Donate" button shown below to continue to make your support for this project and get a present for your support. Before you make your donation, please look at the Preview pages of the two Books first.

Releases

 • Quiz CD - Book(ii) comming soon   
   2014


 • Quiz CD - Book(i) Is Now Available
  April, 2011


  பாகம் ஒன்று இலக்கணப் புத்தகத்தை கற்றுக்கொண்டிருக்கும் ஓர் மாணவன், தான் புத்தகத்தில் கற்றவற்றை கம்பியூட்டர்மூலம் மீண்டும் பயிற்சி செய்து நன்கு விளங்கிக்கொள்ளவும், தான் புத்தகத்தில் கற்ற பகுதியில் பரீட்சை செய்து தன்னைத்தானே பரீட்சித்துக்கொள்ளவும் வசதியாக ஆயிரக்கணக்கான வினாக்களைக்கொண்ட ஓர் புதிர்வினா இறுவட்டு இது ஆகும். உண்மையில் இதை கம்பியூட்டரில் பயிற்சி செய்வதற்கும், புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை செய்வதற்கும் மிக மிக நிறைய வேறுபாடுகள் உண்டு.

 • The Baby English Grammar Part (ii) Book Released
  April, 2010


  இந்த பாகம் இரண்டு இலக்கணப் புத்தகமானது, ஆங்கிலம் இலங்கை ஆண்டு 8 வரை தெரிந்த ஒருவர், ஆங்கிலத்தை தொடர்ந்து மேலே மிக இலகுவான முறையில் ஓர் ஒழுங்கு முறையில் தெளிவாக கற்று வாசிக்க,எழுத, பேச ஏதுவாக திறம்பட எழுதப்பட்டுள்ள ஓர் அரிய புத்தகமாகும். இது இலங்கையில் ஆண்டு 8 இல் இருந்து ஆண்டு 11 வரை உள்ள மாணவர்களுக்கு உகந்தது. வயது வந்தவர்கள் இதை இரண்டு ஆண்டுகளில் மிக தெளிவாகக் கற்றுப் சிறந்த பயனடையலாம். வெளிநாடுகளில் குடிபுகுந்தவர்களும் ஆங்கிலத்தை இப் புத்தகத்தினூடாக மிகத் தெளிவாகக் கற்றுப் பயனடையலாம்.

 • Click here for Book Part (ii) Preview only.

  (A few number of selected pages of Book Part (ii) will only be displayed. Pages are not in the order of the book.)

 • The Baby English Grammar Part (i) Book Released
  April, 2005


  இந்த பாகம் ஒன்று இலக்கணப் புத்தகமானது, ஆங்கிலம் சிறிதும் தெரியாத ஒருவர், ஆங்கிலத்தின் அரிச்சுவட்டில் இருந்து ஆங்கிலத்தை மிக மிக இலகுவான முறையில் ஓர் ஒழுங்கு முறையில் தெளிவாக கற்பதற்கு ஏதுவாக மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ள ஓர் புத்தகமாகும். இது இலங்கையில் ஆண்டு 9 வரை உள்ள மாணவர்களுக்கு உகந்தது. வயது வந்தவர்கள் இப் புத்தகத்தை ஓர் ஆண்டில் கற்கலாம். வெளிநாடுகளில் குடிபுகுந்தவர்களும் ஆங்கிலத்தை இப்புத்தகத்தினூடாக மிகத் தெளிவாகக் கற்கலாம்.

 • Click here for Book Part (i) Preview only.

  (A few number of selected pages of Book Part (i) will only be displayed. Pages are not in the order of the book.)